Celebrating 100 years

வாழ்த்துகிறோம்

Print LR Colour
அன்பு உள்ளம் படைத்தவர் ஆனால் என்று சொல்லாதவர்
இல்லை என்பதை தவிர்த்தவர் ஈகையில் தயங்காதவர் உண்மையைப் பகிர்ந்து கொள்பவர்
ஊக்குவிப்பதில் வல்லவர் எல்லோரையும் நேசிப்பதில் முதன்மையானவர்
ஏன் என்ற வினாவை வினாதவர் ஐயா என்று அன்புடன் அழைக்கப்படுபவர்
ஒன்றல்ல இரண்டல்ல எண்ணிக்கையால் ஓங்கி உயர்ந்து நின்று
100 வது வயதை அடைந்தவர் எங்கள் ஐயா திரு மு.அ.மு.பழநியப்ப செட்டியார் அவர்களே,
திரு மு.அ.மு.பழநியப்ப செட்டியார் அவர்கள் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அஃது என்ற வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப அன்புள்ளம் படைத்த, இனிய முகம், இனிய சொல், நல்வரவேற்கும் உயர்ந்த பண்பு, உண்ணாமல் செல்ல யாரையும் அனுமதிக்காத, 100 வயதினரான அவர்கள் நீள் ஆயுள் நிறை செல்வம் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்க என வாழ்த்த வயது குறைவான போதிலும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
கள்ளம் கபடம் அற்ற மனம், எதையும் மனதில் பூட்டி வைத்துக் கொள்ளாத இதயம், மனதில் உள்ளதை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் பண்பாளர் கைராசி மிக்கவர் என்றும் வாழ்க வாழ்க வளர்க.
ஐயா வாழ்த்துங்கள் எங்கள் அனைவரையும்.
இப்படிக்கு
ராம.மீனாட்சி சுந்தரம்
முதல்வர்
சுப்பிரமணியன் பாலிடெக்னிக் கல்லூரி
இராயவரம்