life history

வாழ்க்கையிலும் சதம் அடித்த இந்த கிரிக்கெட் ரசிகரின் வாழ்க்கைப்பயணம்
ஆயிரம் பிறைகளுக்கு மேல் பற்பல பிறைகள் கண்ட நூற்றாண்டு விழா காணும் திரு.மு.அ.மு. சுப . பழனியப்பசெட்டியார் அவர்கள் திருச்சியிலிருந்து 70 கி . மீ தூரத்திலுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் 1914 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 14 ஆம் நாள் பிறந்தார் . அன்னாரின் நூறாவது பிறந்த நாள் விழாவினை 2014 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள் மகிழ்வோடும் சிறப்போடும் கொண்டாட இருக்கின்றோம் .
விளையாட்டு பிரியரான திரு.மு.அ.மு. சுப , பழனியப்பசெட்டியார் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவர் என்று சொல்வதை விட உயிர் மூச்சாக கொண்டவர் . இந்திய தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டை ஒளிபரப்பிய காலந்தொடங்கி இன்று வரை எந்தவொரு கிரிக்கெட் விளையாட்டினையும் அவர் பார்க்கத் தவறியதில்லை . சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம் . எஸ் . தோனியின் ரசிகரான இவ்விளைஞர் இந்திய கிரிக்கெட் அணியை தோனி அணி என்றே கூறுவார் . தோனி தலைமையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 20-20 கிரிக்கெட் விளையாட்டை மிகுந்த ஆர்வத்தோடு பார்ப்பார் . சிறு குழந்தையைப்போல் உணர்ச்சிப் பெருக்கோடு தன்னை மறந்து , ஆர்ப்பரிக்கும் இயல்பு உடையவர் .
பங்கு வர்த்தக தொழில் ஈடுபாடு கொண்ட சிறந்த வணிகரிவர் . பங்கு பரிவர்த்தனையின் நுணுக்கங்களை திறம்பட அறிந்து தன்னிடம் இருக்கும் பங்குகளின் அன்றாட விவரம் அறிந்து உரிய மாற்றத்தை செய்பவர் . அன்றாட சந்தை விலையையும் , அதற்கான அந்ததந்தக் கம்பெனிகளின் ஆதாய வீதத்தையும் அறிந்து மற்றவர்களுக்கு திறம்பட சொல்வதில் இவருக்கு நிகர் இவரே .
ஐயா , தங்கள் வாழ்நாள் சாதனையான நீண்ட ஆயுள் வாழ்க்கையின் இரகசியம் என்னவேன்று யாராவது வினவினால் , அவர் கடைபிடித்த எளிய வாழ்க்கை முறையினை , அறிந்து பின்பற்றினாலே போதுமானது ,
1 . நாள்தோறும் அதிகாலை ( 4 மணிக்கெல்லாம் ) துயில் எழுந்து கடமைகளைச் செய்பவர் . சிறந்த ஆன்மீகவாதியான் அய்யா அவர்கள் தேவாரம் , திருவாசகம் மற்றும் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் போன்ற நீதி நூல்களை காலையில் ஓதுவதொடு இரவு உறங்க செல்லும்பொழுதும் மறவாமல் பாராயணம் செய்திடுவார் .
2 . காலை , மாலை இருவேளைகளிலும் எளிய உடற்பயிற்சியாக 1 / 2 மணி நேரத்திற்கு குறையாமல் நடைபயிற்சியில் ஈடுபடுவார் .
3 . இளம் வயதிலிருந்தே சரியான நேரத்திற்க்கு , ஆரோக்கியமான உணவினை அளவோடு உண்ணுபவர் .
4 . எதிலும் முழு திருப்தியோடு , உள்ளன்போடு , நடுநிலையோடு , செயல்படகூடியவர் .
5 . ‘ நீர்வழிப்படும் புனைபோல் ‘ விதிவழிப்பட்டது வாழ்க்கை என்பதனை தீர்க்கமாக நம்பக்கூடியவர் . எச்செயலாவது திட்டமிட்டபடி னடைபெறவில்லையெனில் அவரவர் விதிப்படி நடக்கிறது என்றெண்ணி வருத்தமோ , கவலையோ கொள்வதில்லை .
6 . அனைவரிடத்தும் மாறாத அன்பு செலுத்தக்கூடிய மனிதநேயமிக்கப் பண்பே இவருடைய தலையாய பண்பாகும் .
7 . ” வாழ்க்கை வாழ்வதற்கே ” என்பதனை நன்கறிந்து தன் வாழ்க்கையை இனிமையாகவும் , முழுமையாகவும் அனுபவித்து இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர் .
தலைமைப் பண்பைக் கொண்டவர் . எங்களது சுப்பிரமணியன் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும் , கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் , சுப்பிரமணியன் தொழில் நுட்பக்கல்லூரியின் தலைவராகவும் இன்றுவரை இருந்து சிறப்பாக செயல்பட்டு வருபவர் .
கல்லூரி சம்மந்தப்பட்ட விழாக்களுக்கு , அண்ணல் காந்தியடிகளைப் போலவே முன்னதாகவே வந்திருந்து விழா நிறைவு பெறும் வரை அமர்ந்து அனைத்து நிகழ்வுகளையும் கவனிப்பதை தவறியதில்லை .
” தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் ” என்பதனை நன்கறிந்த உயர்ந்த கொடையுள்ளம் கொண்ட நமது இராயவரம் வள்ளல் அவர்கள் இல்லையென்று கேட்போருக்கு மறுக்காமல் வேண்டியதை வாரி வழங்குவதில் வல்லவர் . சிறிய நிகழ்விற்க்கும் பேரானந்தம் கொள்பவர் . ஓவ்வொரு வாரமும் வீட்டை சுற்றியுள்ள எல்லாப் பகுதிக்கும் சென்று அங்கு வாழும் சிறார்களுக்கு பிஸ்கட்டுகளை வழங்கி மகிழ்பவர் . இவரின் செயற்கரியச் செயலால் திரு.மு. அ.மு. சுப . பழனியப்பசெட்டியார் என்ற பெயர் அனைவர் உள்ளத்திலும் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது .
நூற்றாண்டை நெருங்கும் இந்த தொண்ணூற்றொன்பதாவது வயதிலும் மனத்தளர்ச்சியின்றியும் உடற்திறத்துடனும் உள்ளார் , சொல் தளர்வின்றி , செவிப்புலன் உணர்வு குறைவின்றி , நல்ல நிலைமையில் நடமாடிக்கொண்டு தன் கடமைகளை செய்து கொண்டுள்ளார் .
வாழ்வாங்கு வாழ்ந்து வரும் அய்யா அவர்கட்கு 5 குழந்தைகள் , 12 நேரடிப் பேரக்குழந்தைகள் , அடுத்தடுத்த தலைமுறை வாரிசான 3 பேரக்குழந்தைகள் மற்றும் சகோதர் , சகோதரியின் வழியில் பல பேரக்குழந்தைகளைப் பெற்று 200 க்கும் மேற்பட்ட குடும்பக்கிளைக் கொண்ட விருட்சமாக திகழ்கிறார் .
இவ்வளவு பெருமைக்குரிய திரு . பழனியப்பசெட்டியார் அவர்களது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாட அனைத்து உற்றார் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் செட்டிநாட்டைச் சார்ந்த அனைத்து நகரத்தார்களும் , இராயவரம் பகுதிவாழ் மக்களும் ஆர்வத்தோடும் , மகிழ்வோடும் , மிகுந்த எதிர்பார்ப்போடும் காத்திருக்கின்றனர் .
” வாழ்வதோ ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை ” என்பதனை மெய்யாக்கி திரு . பழனியப்பசெட்டியார் அவர்களின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிட்டட்டும் .
ஆனந்த முழக்கம் கொட்டட்டும் .

4 thoughts on “life history

 1. Washington Veerappan

  We wish you very best 100th birthday and I look forward to join the grand celebration.

  Veerappan @ Family, Washington D.C.

 2. Meena Muthiah and Raahul

  Wishing you a wonderful 100th Birthday Celebration…although we won’t be there in person, out thoughts are with you on this special day.

 3. Kavingar Appatchi Sabapathi Editor Appatchi Malar Devakottai, Cell 9361410068

  Iyya avargal innum noorandu vala iravanai prarthikkeran

 4. Jaikumar Krishnasamy

  Dear & Respectful Ayya,

  Belated Birthday Wishes to a great personality.

  I belong to Tirupur. So happy to know about you through a friend. Your character and life style, is surely a great example & inspiration for future generations.

  My prayers that the divinity blesses you with, many many more years of deep peace, sound health and great happiness.

  Would definitely see your time and meet you soon, to seek your blessings.

  Yours – Jai

Comments are closed.